அறிவியல் பெயர்: Trichoderma viride, Trichoderma harzianum
வகை: உயிரியல் பூஞ்சை நோய் கட்டுப்படுத்தி (Bio Fungicide)
வடிவம்: தூள் அல்லது திரவம்
வசிப்பு இடம்: தாவர வேர்கள் சுற்றிய மண் (Rhizosphere region)
Trichoderma பூஞ்சை மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகளை (Fusarium, Pythium, Rhizoctonia, Sclerotium போன்றவை) தாக்கி அழிக்கிறது.
இது பூஞ்சைகளுடன் உணவுக்கான போட்டியில் ஈடுபட்டு அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறது.
மேலும், தாவர வேர்களைச் சுற்றி பாதுகாப்பு போர்வை போல் செயல்படுகிறது.
தாவர வளர்ச்சி ஹார்மோன்களை (Growth hormones) உற்பத்தி செய்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மண்ணில் உள்ள பூஞ்சை நோய்களை இயற்கையாக கட்டுப்படுத்துகிறது.
வேர் அழுகல், தண்டு அழுகல், முளை அழுகல் போன்ற நோய்களைத் தடுக்கும்.
தாவர வளர்ச்சியை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்கிறது.
இரசாயன பூஞ்சைநாசிகளின் தேவையை குறைக்கிறது.
மண் ஆரோக்கியத்தையும் நுண்ணுயிர் சமநிலையையும் பாதுகாக்கிறது.